ஹேக் செய்யப்பட்ட மோடியின் டுவிட்டர் கணக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்க்கப்பட்டுள்ளது.
கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு பதிவேற்றப்பட்ட பதிவில், "இந்தியா மின்னணுப் பணமான பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 பிட்காயினை வாங்கி, நாட்டின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விநியோகித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
தற்சமயம் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சம்பவத்தின் மூலத்தைக் கண்டறிய முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.