மத்திய கிழக்கு போர் நெருக்கடி ; எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி - அநுர அவசர உரையாடல்

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Narendra Modi Middle East
By Sahana Mar 25, 2026 03:17 AM GMT
Report

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே நேற்று மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்காசியாவின் தற்போதைய பதற்றமான நிலைவரங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.

மத்திய கிழக்கு போர் நெருக்கடி ; எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி - அநுர அவசர உரையாடல் | Modi Anurag Urgent Dialogue On Energy Security

இந்திய - இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என உறுதிபூணப்பட்டது.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்காசிய நிலைவரங்கள் குறித்து ஆலோசித்தேன்.

எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் மற்றும் விலையேற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இவ்வாறானதொரு உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US