கொழும்பை வந்தடைந்தது நவீன ரயில் பெட்டிகள்!

india colombo train sets rites ltd
By Krishna Mar 13, 2021 06:58 PM GMT
Report

RITES Ltd நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவுள்ள 160 ரயில் பெட்டிகளில் பத்து பெட்டிகளைக் கொண்ட முதல் தொகுதி 2021 மார்ச் 09ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் EXIM வங்கி ஊடாக இலங்கையின் புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை 2019 செப்டம்பரில் இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் RITES Ltd நிறுவனத்தால் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயணிகள் ரயில் பெட்டிகள் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கரையோர சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு அதிலிருந்து ஏற்படும் தாக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில் துருப்பிடிப்பதை தவிர்க்கும் விசேட தீந்தை, பொலியுரேதேன் வெளிப்பூச்சுக்களுடனான வெள்ளிரும்பு கலங்கள் உள்ளிட்ட விசேட தொழில்நுட்பங்களுடன் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அழகியல்மயமான உள்ளக வடிவமைப்பு, கண்ணாடியால் வேறாக்கப்பட்டிருக்கும் பிரிவுகள், ஒலியைக் கடத்தாத தரை விரிப்புக்கள், சகல பெட்டிகளிலும் எல்இடி மின்குமிழ் தொகுதிகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் முறைமை, ஒலி மற்றும் ஒளி தொகுதிகள் உடனான பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவையும் இந்த ரயில் பெட்டிகளில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே திணைக்களத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சென்னையிலுள்ள ரயில் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory) இந்த பயணிகள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை தற்பொழுது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற டீசல் மூலம் இயங்கும் 78 ரயில் பெட்டிகளை ஒத்தவையாக இவை அமைகின்றன. அவை 2018-19 காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்டவையாகும்.

கொரோனா காரணமாக ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான முடக்கங்கள் போக்குவரத்து தடைகள் ஆகிய மிகமோசமான நிலைமைகளுக்கு மத்தியில் இந்த முதல் தொகுதியான 10 பயணிகள் ரயில் பெட்டிகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்த சில மாதங்களில் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்தியாவின் ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவியானது இதுவரையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி பங்குடமையில் இலங்கை ரயில்வே உட்கட்டமைப்பின் அபிவிருத்திக்கும் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் புகையிரதப் பாதைகளை புனர்நிர்மாணம் செய்தல் (268 Kms), சமிக்கைகள் மற்றும் தொலைத்தொடர்பு முறைமைகள் (330 Kms), கரையோர ரயில் பாதையின் தரம் உயர்த்தல் பணிகள் (118 Kms) ஆகியவை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள திட்டங்களாகும்.

இந்நிலையில் ஏனைய பல திட்டங்களும் அமுல்படுத்தப்படுவதற்கான பல்வேறு நிலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US