பூஸா சிறையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள்!
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், பல இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதிகள் இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் இருந்து உறவினர்களுடனும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளுடனும் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இலஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
பூஸா சிறைச்சாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் பல கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.