தர்பூசணி சாப்பிடும்போது மறந்தும் கூட இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் தர்பூசணி முக்கிய இடம்பிடிக்கிறது.
சுமார் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் உடலுக்கு புத்துணர்ச்சியையும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
தர்பூசணி உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதை உண்ணும் போது செய்யப்படும் சில தவறுகள் செரிமான அமைப்பை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்

ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது
தர்பூசணி சுவையாக இருக்கிறது என்பதற்காக அதை அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. பொதுவாக, ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு தட்டு தர்பூசணித் துண்டுகளைச் சாப்பிடலாம்.
ஒரு நடுத்தர அளவிலான தர்பூசணி 3 முதல் 4 நபர்களுக்கு போதுமானது. துண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2 முதல் 3 பெரிய துண்டுகளைச் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் நீரையும் வழங்கும்.
அதிகமாகச் சாப்பிடுவது வயிற்று உப்புசம் அல்லது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஃபிரிட்ஜில் வைத்து குளிச்சியாக சாப்பிடக்கூடாது
பலர் தர்பூசணியை குளிர்ச்சியாக சாப்பிடுவதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறார்கள். இருப்பினும், டாக்டர் பாண்டேயின் கூற்றுப்படி, தர்பூசணியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மிகவும் குளிர்ச்சியாகச் சாப்பிடுவது வயிற்றுக்குத் தீங்கு விளைவிக்கும்.
அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பழத்தின் இயற்கையான பண்புகளை மாற்றக்கூடும்.

உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது
தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது பலரும் செய்யும் ஒரு பெரிய தவறாகும். இந்தத் தவறு குறிப்பாகக் குழந்தைகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. தர்பூசணியில் ஏற்கெனவே அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது.
அதனுடன் கூடுதலாகத் தண்ணீர் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது வாயுத்தொல்லை, அஜீரணம், வயிற்றுப்போக்கு அல்லது வாந்திக்கு வழிவகுக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்குத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.
