காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி
பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.
பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
காட்டிக்கொடுத்த காணொளி
இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
]
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.