மாயமான முச்சக்கர வண்டிகள் ; வசமாக சிக்கிய திருடன்
பல முச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டியில் உள்ள ‘சன்ஹிந்த செவன’ வீட்டுத் தொகுதிக்கு அருகில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொலன்னாவையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரிடம் இருந்து வெல்லம்பிட்டி மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்குள் திருடப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.