பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்; 7 போத்தல் மதுபானம் குடித்தவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு – கோட்டையில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விழாவில் கல்லந்துகொண்ட இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசார் விசாரணை
சம்பவத்தில் ரன்ன வாடிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இதில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றும், அவர்கள் அதிக விலை கொடுத்து 7 போத்தல் மது வாங்கி அருந்தியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடம் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.