வீட்டில் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருக இந்த விளக்கை ஏற்றுங்கள்!
நம் தமிழர்களின் பாரம்பரியப்படி வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
எந்த ஒரு வீட்டில் தொடர்ந்து தீபம் ஏற்றி பிரகாசமாக இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் கிடைத்து அந்த வீடு எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருக்கும்.
அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற ஏற்றும் அந்த தீபத்தை இனி ஏற்றும் போது ஒரு சிறு மாற்றத்தை செய்தால் நாம் நினைத்தது எல்லாமே நமக்கு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும் வீட்டில் விளக்கேற்றி வழிப்பட காரணம் நமக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண கடாட்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்று கூறப்படுகிறது.
எண்ணெய்கள்
அவ்வாறு விளக்கேற்றும் போது நாம் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள், திரிகள் இவைகளை வைத்து பலன்கள் மாறுபடும்.
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பஞ்ச குட்டி எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், என்று பலவகை எண்ணெய்களை கொண்டு நாம் தீபம் ஏற்றுவோம்.
திரி
விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் மட்டுமல்லாமல் அதில் போடும் திரிக்கும் கூட பல வகை பலன்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது.
பஞ்சு திரி, தாமரை தண்டு திரி, நூல் திரி, என்று பல வகை திரிகளை உபயோகப்படுத்துவோம்.
அவ்வாறு உபயோகப்படுத்தும் போது ஒவ்வொரு எண்ணெய்க்கும், ஒவ்வொரு திரிக்கும் பலன்கள் மாறு படும்.
அந்த வகையில் இப்போது நாம் செய்யப் போகும் இந்த சிறு மாற்றத்தால் நாம் நினைத்தது நடக்கும், மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும்.
செல்வம் பெருக வீட்டில் விளக்கு ஏற்றும் முறை
மகாலட்சுமி
ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி அதில் தாமரை தண்டு திரியை, பஞ்சுத் திரியுடன் திரித்து தினமும் விளக்கேற்றி வந்தால் மகாலட்சுமி தாயார் கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
அது மட்டும் அல்லாமல் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பதோடு நம் இல்லத்தில் செல்வ செழிப்போடு சுபிட்சமாக வாழலாம்.
தாமரைத் தண்டு திரியானது மகாலட்சுமி தாயாரின் அம்சத்தை பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மற்றொரு புறம் மகாலட்சுமி தாயாரின் அம்சமான பசுவிலிருந்து பசு நெய் எடுக்கப்படுகிறது.
இவை இரண்டையும் சேர்த்து தினமும் விளக்கேற்றும் போது எண்ணில் அடங்காத பலன்களை நாம் பெறலாம்.
அகல் விளக்கு
இப்படி பசு நெய்யும், தாமரைத் தண்டு திரியும் கொண்டு ஏற்றப்படும் இந்த தீபத்தை அகல் விளக்கில் ஏற்றும் பொழுது அது மேலும் சிறப்பை தரும்.
நம் வீட்டில் எத்தனை விளக்கு வைத்து தீபம் ஏற்றினாலும் ஒரே ஒரு அகல் தீபம் ஏற்றுவது குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.
தினம் தினம் ஏற்றும் இந்த ஒரு தீபத்தின் மூலம் நம் வாழ்வில் உள்ள இருள் நீங்கி பிரகாசமாக மாறுவதுடன், மகாலட்சுமி தாயாரின் பூரண அனுக்கிரகம் பெற்று நம் வாழ்வில் எண்ணில் அடங்காத பல வளங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.