தேவாலயத்தில் அதிசய சிலை திருட்டு ; CCTV இல் சந்தேகநபர்
கம்பஹா - கந்தானையில் உள்ள புனித செபஸ்டியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமையான செபஸ்டியாரின் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்த சிலை இன்று (01) அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்கு இடையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிசிரிவி இல் பதிவான சந்தேகநபர்
சிவப்பு நிற தொப்பி மற்றும் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு வந்த நபரொருவர் சிலையைத் திருடிச் செல்லும் காட்சி புனித செபஸ்டியார் திருத்தலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் திருத்தலத்தின் ஆண்கள் முன்பள்ளி பகுதியூடாக நுழைந்து அதே வழியாக திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கந்தானை புனித செபஸ்டியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை, பங்கு மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன புதுமையான சிலையைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.