அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த அதிசய பழம்; எது தெரியுமா?
பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் இருந்து வரும் நீண்ட வரலாறு கொண்ட வில்வ மரமானது, வில்வை, குசாபி, கூவிளம் என்பன போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அதோடு இது சைவ சமய வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவபெருமானின் தலவிருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது. நம்முடைய சாஸ்திரங்கள்,புராணங்கள் என அனைத்தும் இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.
வில்வத்தின் வகைகள் :
வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. அவற்றில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வ மரங்கள் காணப்படுகின்றன.
வில்வ இலைகளை கொண்டு சிவனாரைத் தரிசித்தால், முந்தை ஜென்மங்களில் புரித்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
அதே சமயத்தில் வில்வமர நிழல், காற்று ஆகியஅனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. அதோடு வில்வ மரத்தின் அனைத்து பாகங்களும் அதீத மருத்துவ குணங்களை கொண்டது.
பயன்கள்;
விலமரத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு ஆகிய அனைத்தும் பல்வேறு பிணிகளுக்கு மருந்தாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வில்வ இலை தொற்று வியாதிகளை நீக்கவல்லது, வேட்டைப் புண்கள், பித்தம் ஆகியவற்றை போக்கும் தன்மையும் இதற்கு உள்ளது. வில்வ பழம் மலமிளக்கியாக செயல்படுகிறது. வில்வ இலைக் கஷாயம் பருகக் கைகால் பிடிப்பு, உடல்வலி முதலியவை குணமாகிவிடும்.
வில்வ இலைச்சாறு ஜலதோஷம், இருமல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு நிவர்த்தியளிக்கிறது. இதன் பூ மந்தத்தை போக்கவல்லது. வில்வ காய் பசியை தூண்டிவிடும், மலத்தைக் கட்டும், குடல் கிருமிகளை நீக்கும்.
வில்வ இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும். மேலும் இந்த சாற்றினை நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும்.
அதோடு வில்வ இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து 80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் குறையும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.
அதோடு வில்வ மரத்தின் பூவானது வாய் துர்நாற்றத்தைப் போக்கி விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது. வில்வத்தினை காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு செய்து ஊறுகாய், குடிநீர் என பல வகைகளிலும் உட்கொள்ளலாம்.
புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து,மாச்சத்து, கலோரி, உள்ளிட்ட பல சத்துக்கள் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பது பலருக்கு வியப்பை அளித்தாலும் அதுவே நூறு சதவீதம் உண்மையானது எனவும் சொல்லப்படுகின்றது.