தனது பதவியை நன்கொடையாக வழங்கத் தயார்! அலி சப்ரி
நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக நிதி மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பொறுப்பை ஏற்கக்கூடிய ஒருவருக்கு தனது நாடாளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகளை நன்கொடையாக வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (04-05-2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சரியான முறையில் கையாளாவிடில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, கட்சிகளாக பிரிந்து அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயன்ற பங்களிப்பை வழங்குவது அனைவரினதும் தேசிய பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.