விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!
தரம் 1, 5, 6 மற்றும் உயர்தரம் தவிர்ந்த பிற இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான 2024 ஆம் ஆண்டுக்கு உரிய விண்ணப்பங்கள், உரிய பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே பாடசாலைகளில் தரம் 6 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை தரம் ஒன்றிற்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் குறித்த அதிபர்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கான அனுமதி கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.