நாடாளுமன்றத்தில் சஜித்தை கலாய்த்த அமைச்சர்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தூரநோக்கு சிந்தனை கிடையாதென அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
எனவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரிடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது. அவரால் உபதேசம் மட்டுமே வழங்கிக்கொண்டிருக்க முடியும். எதிரணியில் உள்ளவர்கள் அரசுடன் இணைவார்கள். அதற்கான சுபநேரம் வரும்வரை காத்திருக்கின்றனர்.
சஜித் தலைமையின்கீழ் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
மனோ கணேசன், திகாம்பரம் போன்றவர்கள் அரசுடன் இணைவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. அவர்கள் வரவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.