பதவியை இராஜினாமா செய்ய மறுக்கும் அமைச்சர்!
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதை யடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நிமல் ஸ்ரீபால டி சில்வா தனது தொழில் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
அவர் அமைச்சுப் பதவிகளை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர், மத்திய குழுவின் தீர்மானத் தின்படி எந்த நேரத்திலும் ஆட்சியிலிருந்து விலகவும், வெளியேறவும் தயாராக இருப்பதாகக் அவர் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.