எரிபொருள் மூலம் இலாபம் பெரும் விதத்தை வெளியிட்ட அமைச்சர் கஞ்சன!
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஊடாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலாபம் பெரும் விதம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் மூலம் 159.61 ரூபா இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 33.62 ரூபாவும், ஆட்டோ டீசல் லீட்டருக்கு 1.55 ரூபாவும், லங்கா சுப்பர் டீசல் லீட்டருக்கு 41.89 ரூபாவும் இலாபமாகப் பெறப்படுகின்றது.
மேலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 30.62 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய விலை திருத்தம் மற்றும் வரிகளுக்குப் பின்னர் இந்த இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.