அமைச்சர் டக்ளஸுக்கு ஆப்பு வைத்த மின்சாரசபை!
மின்சார கட்டணம் செலுத்தாதமையால் , யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டரில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மின்சார சபை ஊழியர்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் , கட்சியின் தலைமை அலுவலகம் இருளில் மூழ்கி இருக்கிறது.
மின் துண்டிப்பு
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னரனான மின் கட்டண நிலுவை தொகை மற்றும் அதற்கான அபராத தொகை போன்றவை செலுத்தப்படவில்லை என்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , சுன்னாகத்தில் உள்ள தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மின் கட்டணம் செலுத்ததால் , அவர்களுக்கு மின் துண்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், அரசியல் பலத்தினால் மீண்டும் அங்கு மின்னிணைப்பு கொடுக்கப்படிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை , 1995ஆம் ஆண்டின் பின்னர் ஸ்ரீதர் திரையரங்கு இராணுவத்தின் பாவனையில் இருந்த நிலையில் அங்கு டக்லஸின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.