நெடுநேரம் வரிசையில் காத்துநின்ற அமைச்சர் சந்திரசேகர்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, (19) சென்றிருந்தார்.
நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்தார்.
பலரும் பாராட்டு
அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளை ஜனாதிபதி அனுரகுமார மற்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் போல வீண் விரயமோ, ஆடம்பரங்களோ இன்றி மக்கள் மத்தியில் வலம் வருகின்றார்.
இந்த நிலையில், அவரது அமைச்சில் உள்ள அமைச்சர்களும் ஆடம்பரங்களின் சாதராண மக்கள் போல மக்களோடு மக்களேக நின்று தமத்8உ தேவைகளி நிறைவேற்றி கொள்கின்றமை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.