பாலில் சலவைத்தூள் கலந்து கலப்படம் ; உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக 'செயற்கை பால்' தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கலப்பட பால் தயாரிக்கப்பட்டு அருகில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைக்குழு இன்று (08) சோதனை நடத்தியது.

மிகக் குறைந்த அளவு பாலுடன் யூரியா மற்றும் பதப்படுத்தப்பட்ட பொடிகளைக் கலந்து இந்த போலி பால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாலின் நிறம், அடர்த்தி மற்றும் புரத அளவை அப்படியே பிரதிபலிக்க சலவை தூள், யூரியா உரம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெறும் 300 லீற்றர் பாலை வைத்து, சுமார் 1,700 முதல் 1,800 லீற்றர் செயற்கை பாலை இந்தத் தொழிற்சாலை தினசரி உற்பத்தி செய்துள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.