நள்ளிரவில் இளம் பெண்களுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் ; பொலிஸாரின் பிடியில் இளைஞர்கள்
மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில் பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சில இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் இளம் பெண்களை பின்னால் ஏற்றிச் செல்லும் போட்டியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசிய தகவல்
சந்தேகத்திற்குரிய இளைஞர்களுடன் 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, மஹரகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு, ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பணத்திற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க இளைஞர்கள் குழு தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டிய பகுதி மக்களிடமிருந்து பல அழைப்புகள் சனிக்கிழமை (13) நள்ளிரவு முதல் வந்ததைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட மஹரகம பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தபோது அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஹோமாகம, மஹரகம, மத்தேகொட, கொட்டாவ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இளைஞர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.