வெளிநாட்டு யுவதியால் நடுத்தெருவுக்கு வந்த இலங்கைக் குடும்பம்
அக்கரைப்பற்றில் திருமணமாகி ஒரு பிள்ளையின் தாயாரான 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் வீட்டில் இந்தியப் பெண் ஒருவர் பல நாட்களாக தங்கியிருந்த நிலையில், இரண்டு யுவதிகளினதும் அசாதாரண நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாத யுவதியின் தந்தை அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளின்போது இலங்கைப் பெண் தனது தோழியுடன் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் அனுமதிக்காவிட்டால் உயிரை மாய்ப்போம் என கூறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த இலங்கைப் பெண் திருமணமானவர் என்பதுடன், ஒரு குழந்தையின் தாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைப் பெண்ணின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இரு பெண்களையும் கடந்த புதன்கிழமை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து, இரு பெண்களையும் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு கல்முனை நீதவான் எம்.எச்.எம்.ஹன்ஸா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு, அவர்களின் மருத்துவ அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த இரு பெண்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் அக்கரைபற்றில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.