மத்திய கிழக்கு பதற்றம் ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 வானூர்தி சேவைகள் ரத்து
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (01) அங்கு இயக்கப்படவிருந்த 12 வானூர்தி சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வான்பரப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ரத்து செய்யப்பட்டுள்ள வானூர்திகளின் விபரங்கள் பின்வருமாறு,

கொழும்பு - டுபாய்: UL 231 / UL 225
டுபாய் - கொழும்பு: UL 232 / UL 226
கொழும்பு - தோஹா: UL 217
தோஹா - கொழும்பு: UL 218
கொழும்பு - டம்மாம்: UL 253
டம்மாம் - கொழும்பு: UL 254
கொழும்பு - ரியாத்: UL 265
ரியாத் - கொழும்பு: UL 266
கொழும்பு - குவைத்: UL 229
குவைத் - கொழும்பு: UL 230
இதேவேளை மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், மேலதிக தகவல்களுக்கு அந்தந்த பயண முகவர்கள் அல்லது வானூர்தி நிறுவனத்தின் இணையத்தளத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.