மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்
உலக வாழ் இந்துக்கள மத்தியில் மிகவும் பிரபலமான , தமிழகத்தின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார்.
இவருக்கு வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது , இலங்கை புலம்பெயர்வாழ் தமிழர்களும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வழிபடவென்றே தமிழகம் செல்வார்கள்.
இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.