சுமந்திரன் மற்றும் இந்தோ - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் இடையே சந்திப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் அதனை நீட்டிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையை தடைப்படாது முன்கொண்டு செல்வதற்கு அது வழிவகுக்கும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.