மீகொட கார் மோதிய சம்பவம்; நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்
மீகொட பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களின் மேல் கார் மோதிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நால்வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (16) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விசாரணையின்போது, உயிரிழந்தவர்களில் ஒருவரின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஐந்து குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்க பிரதிவாதிகள் தரப்பு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களை ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.