மீகஹவத்தை கொலை விவகாரம்; சிக்கிய பெண்கள்
அங்கொடை, மீகஹவத்தைப் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பெண்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26ஆம் திகதி காலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியமை சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர், அங்கொடை லொக்காவின் உதவியாளர் என்பதும், அவர் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை, பந்தகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த பெண்கள் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் முல்லேரியா மற்றும் பொரள்ளை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னதாக சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.