குடிசை ஒன்றுக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
த்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கற்பிட்டி பொலிஸாரால் நேற்று (4) கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் - கற்பிட்டி, குலியமுனை தீவில் உள்ள குடிசை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிக பெறுமதியான மருந்துகள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும் அதிக பெறுமதியான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அடங்கிய 16 பொதிகளே இந்த குடிசையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.