வவுனியாவில் இந்த வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை!
வவுனியா திருநாவற்குளத்தில் தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வும், மருத்துவ பரிசோதனையும் இன்றைய தினம் (04-11-2022) இடம்பெற்றிருந்தது.
இதன்போது திருநாவற்குளம் கிராமத்தை சேர்ந்த 35 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களிடம் மருத்துவ பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா - திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர்கள், தாண்டிக்குளம் கிராம குடும்பநல உத்தியோகத்தர், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு திருநாவற்குளம் கிராமத்தை சேர்ந்த 35 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.