தமிழர் தாயகத்தில் மருத்துவ மாபியா; அம்பலப்படுத்திய தமிழ் பெண் மருத்துவரிற்கு நேர்ந்த கதி!
கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினி அண்மையில் மருத்துவ மாபியாக்களை தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
அதில் அரச தரப்பின் அரசியல்வாதி ஒருவர் முறையற்ற முறையில் வைத்தியரோடு முண்டியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது தனிப்படட படங்கள் சில வெளியாக்கியுள்ளன .
ஒருவர் தன் வேலை செய்யும் துறையில் உண்மையாக இருந்ததால் , மக்களை உறிஞ்சும் சில புல்லுரிவிகளுக்கு அதனை தாங்க முடியவில்லை. இதற்காக அவரது தனிப்படட விடயங்களை தேடியதில் பெண் என பாராது கூட இருந்த சில துரோகிகளால் இப்போது அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
ஊழலை வெளிக்கொண்டுவந்த அதிகாரி அடக்கப்பட்டார்
இது அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர்கள் ஊழலை வெளிப்படுத்தும் நபர் இப்படித்தான் பழிவாங்கப்படுவார் என்பதை உணர்த்துகின்றது. ஒரு ஊழலை வெளிக்கொண்டுவந்த அதிகாரி அடக்கப்பட்டார் என்பதை மறந்துவிட்டார்கள்.
அதுமட்டுமல்லாது இனி யார் ஊழலை வெளிக்கொண்டுவந்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலை என்பதையும் மறைமுகமாக சிலர் எச்சரிப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினி மிரட்டல் சம்பவத்தில் தொடரும் மௌனம்? உண்மையை தட்டிக்கேட்க ஏன் யாரும் முன்வரவில்லை. பெண் என்பதாலா?
சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களால் வைத்தியர் பிரியாந்தினிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.