இலங்கையில் இடம்பெறும் மருத்துவ சீர்கேடுகள்! அதற்கான தீர்வுகள்
வித்தியா கொலை வழக்கு சம்பவத்தில் நீதி கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவேளை சிலர் நீதிமன்றுக்கு கல்லெறிந்தனர் அவர்கள் கடைசியில் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர்.
குறித்த சம்பவத்தில உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டமைக்கு கல்லெறிந்ததவர்களின் செயல் காரணமாயிருக்கவில்லை.
தற்போது மன்னார் விடயத்தில் சாவகச்சேரி விடயத்தில் வைத்தியசாலை அத்தியட்சகரை அடிக்க தூண்டும் வைத்தியசாலைக்குள் புகுந்து அனைவரையும் வெளியேற்றத்தூண்டும் பின்னூட்டங்களை பல சமூக வலைத்தளங்களில் காணொளிகளில் தெரிவிக்கின்றனர்.
இது எவ்வளவு பாரதூரமானது என அவர்களுக்கு புரியவில்லை நடமுறையில் உள்ள சட்டங்கள் அவர்களை சட்டத்தின்பிடியில் உள்ளே அனுப்ப வழிவகுக்கும் தவிர சம்பவங்களுக்கு தீர்வை வழங்காது நாம் ஆக்கபூர்வமாக உரையாடப்பழக வேண்டும்.
மன்னார் இளந்தாயின் மரணம் மருத்துவ அசண்டையீனம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.
இருந்தும் வரும்வாலம் மேலதிக விசாரணை முடிவுற்றதும் முழுமையான விபரங்கள் தெரியவரும் குறித்த தாயினை அனுமதித்த பின் இரத்தப்பெருக்கு தொடர்கையில் உடனடியாக ஒரு வைத்தியர் வந்து பார்த்திருக்க வேண்டும் அதன் பின்னரே அதை கழுவ வேண்டும், இதன் மூலம் அவர்களது அசண்டையீனம் ஆரம்பிக்கிறது கடமையில் இருந்த வைத்தியர் இருந்தாரா? உடனடி மதிப்பீடு செய்தாரா? என கேள்விகள் நீள்கின்றன.
பெரும்பாலும் மருத்துவ அசண்டையீனத்துக்கான முதலாவது வெளிப்படையான நடவடிக்கை ஒன்றை நாம் மன்னாரில் எதிர்பார்க்கலாம்.
அடுத்த கேள்வி மருத்துவ அசண்டையீனம் காரணமான பாதிப்புக்கள் மரணங்கள் இலங்கையில் இதுவரை நடைபெறவே இல்லையா? என்று கேட்டால் பதில் என்ன வரும்? இருந்தன ஆனால் இல்லை என பதில் வரும்.
வைத்தியர்கள சிலருடன் உரையாடிய வேளை நடந்தன ஆனால் "பல" மூடி மறைக்கப்பட்டிருக்க "சிலவற்றுக்கு" உள்ளக விசரணையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இரகசியமாக எடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் அவை நோயாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவது இல்லை என்பதாக இருந்தது. தற்போதைய மக்கள் கொந்தளிப்புக்கு முக்கிய காரணமே இந்த முறைகேடுகள் அசண்டையீனங்களுக்கு வெளிப்படையான தீர்வுகள் வழங்கப்படிருக்காதமையும் அவை மூடி மறைக்கப்பட்டமையும் தான்.
அவ்வப்போது தீர்வுகள் வழங்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வந்திருந்தால் மக்கள் இந்தளவுக்கு வெறுப்பை உமிழ்ந்திருக்க மாட்டார்கள் இலங்கையினை பொறுத்தவரை மருத்துவர்களின் ஆளணி பற்றாக்குறை உள்ளது அதனை பயன்படுத்தி இருக்கின்ற வைத்தியர்கள ஊழியர்கள் விடுகின்ற தவறுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதே உண்மை.
அதேவேளை 20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையினை விட ஆளணியினரும் வளங்களும் அதிகரித்த நிலையிலும் இவ்வளவு நோயாளர்கள் அதிகரிக்கவும் தனியார் வைத்தியசாலைகள் அதிகரிக்கவும் காரணம் மக்களின் மனநிலையும் மருத்துவ மாபியாக்களின் செயற்பாடுகளும் தான்.
ஆரம்பத்தில் உதாரணத்துக்கு விபத்து நடந்தால் பொது வைத்திய நிபுணர்களே அனைத்தையும் செய்தனர் இப்ப தனி வைத்திய நிபுணர்களுக்கு சிபாரிசு பண்ண திகதி குறித்து காத்திருப்பு பட்டியல் நீள்கிறது, அதை பயன்படுத்தி தனியார் துறை வைத்தியம் தன் கல்லாவை நிரப்புகிறது.
நாம் வைத்தியர்களை நாடும் விடயங்களில் 80 வீதமானவற்றுக்கு வைத்தியரிடம் செல்லாமலேயே குணமாக கூடியவை அதற்காக காட்டாமல் இருங்கள் என ஊக்குவிக்க முடியாது.
அரச வைத்திய சாலைகளில் துண்டு கொடுத்து வெளியில் மருந்தும் உபகரணங்களும் வாங்கும் நிலையினை அனுமதிக்கும் வைத்திசாலை அத்தியட்சகர்கள் தங்களுக்கு இது தெரியாது என்று சொல்லி தப்பி விட முடியாது.
தற்போது நாம் மருத்துவ மாபியா விடயங்களையும் நிர்வாக தவறுகள் குறைபாடுகளையும் ஒன்றாக குழப்பி வைத்திருக்கின்றோம்.
இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும் தவறான வைத்தியர்களையும் மற்றவர்களையும் பிரித்து பார்க்க வேண்டும்.
நாம் செய்யவேண்டியது நான் முதல் பதிவில். கூறியது போல சுயாதீன செயலணி உருவாக்கி மக்களுக்கு அறிவூட்டுவதோடு பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்
வெளிநாடுகளில் உள்ளது போல பொறுப்புக்கூறலை உறுதி செய்ய மெடிக்கல் அசண்டையீனத்துக்கான காப்புறுதி அறிமுகம் செய்து வைத்தியர்கள் பணியாளர்களிடம் அதற்காக ஒருதொகையினை சம்பளத்தில் கழிக்க வேணும்
மருத்துவ காப்புறுதி கட்டாயமாக்கலாம்
ஒரு சத்திரசிகிச்சை செய்ய முன்பாக தலைமை வைத்தியர் நோயாளிக்கும் உறவினருக்கும் தன்னை அறிமுகப்படுத்தி நிலமை முழுவதையும் விளங்கப்படுத்தவேண்டும்.
நோயாளருடனும் உறவினருடனும் நட்புறவுடன் பேசுவதை உறுதி செய்யவேண்டும் அசண்டையீனங்களுக்குரிய விசாரணைகள் செய்யவென சுயாதீன கவுன்சில் ஒன்று அரசினால் நிறுவப்பவேண்டும் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பாட்டால் மாற்றம் கொண்டு வரலாம் என குறித்த தகவலை முகநூலில் தங்கராஜா தவரூபன் பதிவிட்டுள்ளார்.