மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி

Sri Lanka Police Matara Gun Shooting Drugs
By Sahana Feb 21, 2026 07:16 PM GMT
Report

மாத்தறை - தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ; 5 மாதங்கள் கழித்து மீண்டும் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ; 5 மாதங்கள் கழித்து மீண்டும் அதிரடி நடவடிக்கை

இன்று பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் கார் ஒன்றில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் 55 வயதான சிரில் ஹேந்தவித்தாரண என்ற "டிலைட்" என அழைக்கப்படும் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி | Matara Shooting Incident Background Revealed

அவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் 2023 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், அவர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் ரோந்துப் புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரைப் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இன்றைய தினமும் அவர் கந்தரவிலிருந்து தெவிநுவரவிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட நபரின் சகோதரரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைக் கொலை செய்வதற்காகத் துப்பாக்கிதாரிகள் மோட்டார் கார் ஒன்றிலேயே வந்துள்ளதுடன், அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இதற்கமைய, சந்தேகநபர்களைக் கைது செய்வதப்பதற்காக 6 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், கொலையாளிகள் வந்ததாகக் கூறப்படும் மோட்டார் கார் மாத்தறை, அமலகொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி | Matara Shooting Incident Background Revealed

இன்று கொல்லப்பட்ட சிரில் ஹேந்தவித்தாரண எனப்படும் "டிலைட்" என்பவரால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எல்லகந்த ஆரண்ய சேனாசனம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில், பாதாள உலகக் குழு உறுப்பினரான 'தெவிநுவர தமிழ்' என்பவரின் நெருங்கிய சகாவான 'ஜுங்கய்யா லால்' என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் கொலையைத் தொடர்ந்து, 'தெவிநுவர தமிழ்' என்பவர் 'டிலைட்' தரப்பினரை இலக்கு வைத்து அவர்கள் பயணித்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களுக்குக் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மேன்முறையீட்டின் ஊடாக அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், 'டிலைட்' என்பவர் 'தெஹிகெதர பாலே' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆனால், பிற்காலத்தில் 'தெஹிகெதர பாலே மல்லி' என்பவரால் மேற்கொள்ளப்படும் ஹெரோயின் வர்த்தகத்தின் ஒரு பகுதியை 'டிலைட்' திருடியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இனப்படுகொலை விசாரணைக்கு ஆதரவு ; சுவிஸ் அரசியலில் தமிழர் பங்கு

இனப்படுகொலை விசாரணைக்கு ஆதரவு ; சுவிஸ் அரசியலில் தமிழர் பங்கு

அத்துடன், குறித்த நபர் 'தெஹிகெதர பாலே மல்லி'யின் எதிர்த் தரப்பான 'உனக்குருவே சாந்த' என்பவருடனும் தொடர்பைப் பேணியுள்ளதுடன், அதற்கமைய இரண்டு தரப்பினரதும் தகவல்களை இரு தரப்பிற்கும் வழங்கியமையினாலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் தற்போது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தர பிரதேசத்தில் உயிரிழந்த இந்த நபருக்கு மேலதிகமாக மேலும் 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பொலிஸார் தமது பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; தெற்கு மாகாண விசாரணை பிரிவு நடவடிக்கை

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; தெற்கு மாகாண விசாரணை பிரிவு நடவடிக்கை

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US