மாத்தறை வன்முறையில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி!
மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு மூன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக ஒன்றுகூடல் மற்றும் பொலிஸ் முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் மாத்தறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் முச்சக்கர வண்டியை சேதப்படுத்தியதற்காக Rs. 6,000 & Rs. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு – மாத்தறை வீதியை மறித்து எரிபொருள் கோரி ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.