மாத்தளை பிரண்டிகல பிரதேசம் சுற்றுலா தலமாக அபிவிருத்தி
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரண்டிகல பிரதேசத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், சுற்றுலா வலயத்தை மையமாகக் கொண்டு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் அண்மையில் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பிரண்டிகல சுற்றுலா தல நுழைவுப் பலகையும் நடைபாதை அமைக்கப்பட்ட வீதியின் ஒரு பகுதி திறக்கப்பட்டது, காட்சிப் புள்ளி ஆய்வு செய்யப்பட்டது.

புகைப்பட இடம் திறக்கப்பட்டது (Photos Spot மற்றும் மலைத்தொடரில் இருந்து (Abseiling) உட்பட பிரண்டிகல தொடர்பான சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க, பிரண்டிகல நண்பர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.