மிகப்பெரிய சமையல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஈழ்த்தமிழர்!
பிரபல தொலைக்காட்சி நடாத்தும் 20 வது MasterChef போட்டியில், ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட பிருந்தன் பிரதாபன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
Brin Pirathapan என்ற பெயருடன் ஒவ்வொரு தடவையும் சிறப்பாக தனது சமையல் திறனை வெளிப்படுத்தி பல சவாலான படிகளைத் தாண்டி இந்த வெற்றியைப்பதிவு செய்துள்ளார்.
விலங்கியல் மருத்துவரான பிருந்தன் இந்தத்தொடரில் தனது பின்னணி பண்பாடு, கலாசார அடையாளங்களை தனது பெற்றோர்கள் இருந்து கற்றுக்கொண்டு அதை சமையற்கலையிலும் உள்வாங்கி சிறப்பாக செயற்பட்டது வெற்றிபெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடுவர்களாக பங்குபற்றிய விற்பன்னர்களும் பிருந்தனின் சிறப்பான கண்டுபிடிப்புடன் கூடிய தனித்திறமை பற்றி சிறப்புடன் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
29 வயதான பிரின் பிரதாபன் இங்கிலாந்தின் Essex இல் பிறந்து Chelmsford எனும் இடத்தில் வளர்ந்தவரர ஆவார்.
இவரின் பூர்வீகம் தாயகத்தின் உரும்பிராய் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் தன் தனித்திறமையால் வெற்றிபெற்று சாதனைபடைத்த வெற்றியாளன் பிருந்தனை வெற்றிநடை பெருமையுடன் வாழ்த்துகிறது.