கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை
கொழும்பு, வெள்ளவத்தையில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக பொலிஸார் அந்த பகுதிகளில் அவதானம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக வெள்ளவத்தை வீதியில் உள்ள ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒரு நபரை அழைத்து கருத்தரங்கு நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மேலும் வீடுகளை இரவு நேரத்தில் பூட்டிவைத்துவிட்டு உறங்கவும் ஜன்னல்களை மூடவும் தெரிவித்தனர். சந்தேக நபர் யாரேனும் அந்த பகதியில் நடமாடினால் பொலிஸார் தங்கள்து விசேட இலக்கங்களை கொடுத்து தொடர்புகொள்ள வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சிசிரிவி கமராவை எந்நேரமும் பயன்பாட்டில் வைத்திருக்கவும் தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.