மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் பாரிய கொள்ளை சம்பவம்!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறை கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், மவூஸ், கீபோட் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலை பூட்டப்பட்டிருந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு பாடசாலையின் கணினி பிரிவு அறையின் கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், ஒரு மவூஸ், ஒரு கீபோட் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையிடப்பட்ட பகுதியை பார்வையிட்டு பொலிஸ் தடவியல் பிரிவை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.