உக்கிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்! உக்ரைன் இராணுவத்திற்கு கிடைத்த பெரு மகிழ்ச்சியான செய்தி
உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து அந்நாட்டு அதிபர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
4வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. குண்டுவெடிப்பு மூலம் உக்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்றைய போரில், ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைப்பதை தடுக்க உக்ரைன் ராணுவம் தீவிர சண்டையில் ஈடுபட்டது.
தெருக்களில் இரு இராணுவத்தினருக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வந்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், முற்றுகையிட்ட ரஷ்யப் படையினரை விரட்டியடித்து கார்கிவ் நகரம் முழுவதையும் மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
4000க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அழித்துள்ளதாக உக்ரைன் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் வீரர்களுக்கு மாதாந்திர சம்பள உயர்வை அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்தார் இந்த செய்தி உக்ரைன் இராணுவ வீரர்களிற்கு பெரு மகிழ்ச்சியான செய்தி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை ரூபாயில் ரூ.6,74,711.80 மாத சம்பளமாக அறிவித்தார்.