அவசரக்கால சட்டத்தால் நாடு சந்திக்கவுள்ள பாரிய விளைவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானதால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசாங்கம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால், இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முழுமையாக எதிர்த்த போது அதனை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.