பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற பேரவையில் பாரிய மோசடி! சந்தேக நபருக்கு நேர்ந்த கதி
கொழும்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற போர்வையில் வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பொரளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரபல சமூக ஊடகமான வாட்ஸ்அப் மூலம் பணத்தை மோசடி செய்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பொய்யான முறைப்பாடுகளைப் பதிவுசெய்து வழக்குத்தாக்கல் செய்வதாக அச்சுறுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.