தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் பாரிய வீழ்ச்சி!
இன்றும் (28) சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2.57 சதவீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை, வெள்ளியின் விலையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.80 டொலர்களாக வீழ்ச்சியடைந்து 72.54 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 4.97 சதவீத வீழ்ச்சியாகும்
இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்று தங்க்கம் விலையானது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,050 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.