முல்லேரியாவில் கொடூர கொலை சம்பவம்: இணையத்தில் பரவும் காணொளி
பாதாள உலகக்குழுத் தலைவர் அங்கொட லொக்காவுக்கு நெருக்கமானவர் ஒருவரை அங்கொடை மீகஹவத்தை பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ள்து.
இந்த கொலை சம்பவம் நேற்று (26) வியாக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின்னர் கொலையாளிகள் தப்பிச் செல்லும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி இருந்த நிலையில் குறித்த சிசிரிவி காணொளி பொலிஸாரினால் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
அதில், துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 6.35 மணி அளவில் கருப்பு நிற தலைக்கவசம் மற்றும் ஜெகட் அணிந்து கடுவலை விகாரைக்கு அருகில் நிற்பது பதிவாகி இருந்தது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் மேலும் இருவர் வந்து குறித்த நபர்களிடம் இருந்து பொதி ஒன்றை பெற்றுக் செல்லும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிசிரிவியில் பதிவான இந்த கொலை தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.