வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற படுகொலை ; ஜனாதிபதி அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் மரணத்திற்கு இளைஞனின் குடும்பத்தினர் ஆதாரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
சகோதரனை கட்டி வைத்து அடித்து கொலை செய்தவிட்டு, இறந்ததும் இராஜாங்க அமைச்சர் ஏணி வைத்து மதில் மேல் குதித்து தப்பி சென்றுள்ளார் என்று வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன் கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மன்றேசா வீதியில் 2021-06-21ஆம் திகதியன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த இளைஞனின் படுகொலைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் குடும்பத்தினர் நீதி கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞனின் அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.