பாடசாலையில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்... அதிபருக்கு நேர்ந்த கதி!
மஸ்கெலியாவில் பாடசாலை ஒன்றில் சில தினங்களுக்கு முன் கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த நால்வரும் நேற்றையதினம் (05-04-2024) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது நீதவான் அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஹட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்று (05) குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோரும் ஒன்றுகூடினர்.
இதேவேளை மாணவன் மரணத்திற்கு அதிபருக்கும் பங்கு உண்டு என்பதை வற்புறுத்திய பெற்றோர்கள், பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிபரை இடமாற்றம் செய்து பிரதி அதிபரை தற்காலிக அதிபராக நியமித்துள்ளனர்.