சட்டசபையில் அமளிதுமளி; திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும் ஏ.வா. வேலு குற்றம்சாட்டினார்.
BREAKING:
— Actor Vijay Team (@ActorVijayTeam) September 8, 2026
Assembly marshals arrived and escorted the protesting DMK members out of the House. pic.twitter.com/GAW99uRnuK
இதையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உத்தரவிட்டார்.
உடனடியாக அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.