சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார்.
சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். எனவே அடுத்து வரும் 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

உங்கள் ராசி உள்ளதா ?
ரிஷபம் :புதிய தொழிலை தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம் :புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம் :வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் நண்பரை/உறவினரைச் சந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். மொத்தத்தில் அடுத்த 3 மாத காலம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.