செவ்வாய் பெயர்ச்சி 2025 ; இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்
நவகிரகங்களில் ஆக்ரோஷமான கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் கிரக நிலை மாற்றங்கள் அமைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை அளிக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
எதிர்வரும் ஜூலை 28, 2025 அன்று கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் வரும் செப்டம்பர் 13, 2025 வரையில் கன்னி ராசியில் பயணிக்கிறார். கிட்டத்தட்ட 45 நாட்கள் நீடிக்கும் இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட ஒரு சில ராசியினரின் வாழ்வில் மகத்தான மாற்றங்களை கொண்டு வர காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மகத்தான மாற்றங்கள்
தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் செவ்வாய், கேதுவுடன் இணைந்து ஒரு சில ராசியினருக்கு பாதகமான சூழலை உண்டாக்கி இருந்த நிலையில், தனது கோர முகத்தை மாற்றி நன்மைகளை அளிக்கும் கிரகமாக மாற இருக்கிறார்.
சிம்மம்: செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். திடீர் நிதி ஆதாயங்களும் புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வெற்றிக்கான பாதை மக்களுக்குத் திறக்கும். நீங்கள் ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்லலாம். பெரிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில், சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.. சிலருக்கு தலைமை பொறுப்பு கூட கிடைக்கலாம்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் நன்மை இருக்கும். தொழிலில் நல்ல வருமானம், லாபம் கிடைக்கும்.. பண வரவு அதிகரிக்கும்.. புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த நேரத்தில், நீங்கள் புதிதாக ஒரு கார் அல்லது வாகனம் கூட வாங்கலாம்..
மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு, கன்னியில் செவ்வாய் சஞ்சரிப்பது நன்மை பயக்கும் வேலை மற்றும் வணிகம் தொடர்பான இனிமையான மற்றும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்வார்கள். வருமானம் பெருகும்.. நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்த நேரத்தில் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு நல்லதாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.