செவ்வாய் கிரகத்தில் பூமியை ஒத்த பருவநிலை
பூமியைப் போன்ற பருவ நிலைமை செவ்வாய்க்கிரகத்தில் நிலவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்ச்சியான மற்றும் வறண்ட பருவ நிலைகள் செவ்வாய் கிரகத்தில் நிலவியுள்ளதுடன் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்த இடமாகவும் இருந்திருக்க கூடும் என nature சஞ்சிகை வெளியிட்ட கண்டுப்பிடிப்புகள் கூறுகின்றன.
நாசாவால் வெளியிடப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் படம் வண்டல் பாறைகளில் அறுகோணப் படிம வடிவங்களைக் காட்டுகிறது. ஆனால் தற்போது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு ஒரு வறண்ட பாலைவனமாக காணப்படுகின்றது.
பில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய்க் கிரகத்தில் பரந்த ஏரிகளும் ஆறுகளும் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நாசாவினால் அனுப்பப்பட்ட Curiosity விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கடந்த பத்தாண்டுகளாக ‘Gale Crater’ பகுதியின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறது.
மேலும் அங்கு உயிரினங்கள் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. தொடர்ச்சியாக ஆய்வுகள் ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.