காதலிக்கு திருமண நிச்சயம்; நான்கு பிள்ளைகளின் தந்தை வெறிச்செயல்!
முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட்
அதற்காக வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
அசிட் தாக்குதலால் 60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில், அசிட் வீசியது பெண்ணின் முன்னாள் காதலர் என்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில் இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேறொரு நபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படவுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்து அசிட் வீசியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முன்னாள் காதலர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.