அண்ணனால் நிறைமாத கர்ப்பிணித் தங்கைக்கு நேர்ந்த கொடூரம் ; அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
வேலூர் அருகே கையில் குத்தப்பட்ட கத்தியுடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் சூரிய குளம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் என்பவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபருடன் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாள் இரவு சக்திவேல், சதிஷ் இடையே மீண்டும் தகராறு வெடித்திருக்கிறது.

வாக்குவாதம்
அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது வீட்டிற்குள் ஓடிய அவர் கையில் சிக்கிய கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு சக்திவேலை நோக்கி ஆவேசமாக ஓடி வந்ததை கண்ட சக்திவேலின் கர்ப்பிணித் தங்கை பதறிப்போய் ஓடி வந்து அண்ணனுக்கு முன்னாள் வந்து மறித்துக் கொண்டு நின்றுள்ளார்.
அப்போது கர்ப்பிணி பெண்ணின் வலது கையில் கத்தி ஆழமாக சொருகியுள்ளது. 9 மாத கர்ப்பிணியான பெண் வலி பொறுக்க முடியாமல் அலறித்துடித்த படி தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சதிஷைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.