எதிர்கால தமிழர்களின் வாழ்வியலில் கடலியல் கல்வியின், ஆராய்ச்சியின் அவசியம்
மிக நீண்ட கால தொண்மை மிகு வரலாற்றை கொண்ட தமிழர்களின் வாழ்வியல் தொடர்பில் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதும் கண்டறிவதும் மிக இன்றியமையாதவையாகின்றன.
எதிர்கால தமிழர்களின் வாழ்வியலில் Marine Expertise(கடலியல் நிபுணத்துவம்) கல்வி மற்றும் ஆராய்ச்சியின் அவசியம் கீழ்வரும் ஆய்வுக் கட்டுரையில் விரிவாக ஆராயலாம்.

எதிர்கால தமிழர்களின் கடல் சார் வாழ்வியல்
இந்தியப் பெருங்கடலின் மையத்தில் முத்திரை பதித்ததுபோல் அமைந்துள்ள இலங்கை, வரலாறாகவும் புவியியலாகவும் கடல் சார்ந்த நாடாக விளங்குகிறது. கடலால் சூழ்ந்துள்ள ஒரு தீவு என்பதாலேயே, அதன் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, உணவு, கலாசாரம் என அனைத்திலும் கடல் ஒரு மையச் சக்தியாக இருந்து வந்துள்ளது.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீண்ட கரையோரத்தை கொண்ட தமிழ் சமூகத்தின் எதிர்கால வாழ்வியலில் Marine Expertise (கடலியல் நிபுணத்துவம்) என்பது தவிர்க்க முடியாத கல்வி–ஆராய்ச்சி துறையாக மாறி வருகிறது; அல்லது மாற வேண்டும் என்பது எமது விருப்பாகும்.
இலங்கைத் தீவின் அமைவிடம்; ஒரு புவியியல் பலம்..!
இந்திய துணைக்கண்டத்தின் தெற்கில், முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளின் அருகாமையில் இலங்கை அமைந்துள்ளது. கிழக்கு–மேற்கு உலக வர்த்தகக் கப்பல்கள் கடந்து செல்லும் கடற்பாதைகளுக்கு அருகிலுள்ள இந்த அமைவிடம், இலங்கைக்கு இயற்கையாகவே கடல்சார் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
- 1,340 கிலோமீட்டருக்கும் அதிகமான கரையோரம்
- வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட, அகலமான, ஆழமற்ற கடற்பகுதிகள்
- மீன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழல் இவை அனைத்தும் கடலை மையமாகக் கொண்ட வாழ்வாதார வளர்ச்சிக்கான அடிப்படைப் புள்ளிகளாகும்.
கடல் சூழ் நிலை மற்றும் மீன் வளம்..!
இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல் பகுதிகள் வெப்பமண்டல தன்மையைக் கொண்டவை. இதனால்,
- Tuna துணா, travelly ,Squid , prawns,Crabs (நண்டுகள்)போன்ற உயர் வர்த்தக மதிப்புள்ள மீன் இனங்கள்
- கடற்பாசி (Seaweed), பவளம், முத்துச் சிப்பிகள்
- ஆழ்கடல் மீன்பிடி வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன.
வடக்கு, கிழக்கு கரையோரங்களில் பாரம்பரிய மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக அறிவைப் பெற்றிருந்தாலும், அறிவியல் அடிப்படையிலான Marine Technology மற்றும் Sustainable Fisheries Science, ஆழ்கடல் மீன்பிடி இன்றும் குறைபாடாகவே உள்ளது.

கனிம வளங்கள்: கடலடியில் மறைந்த செல்வங்கள்..!
இலங்கையின் கடலடிப் பகுதிகளில்,
- Ilmenite, Rutile, Monazite போன்ற கனிமங்கள்
- கடலடிப் மணலில் உள்ள Heavy Mineral Sands
- எதிர்காலத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய Offshore Energy Resources
இவை இன்னும் முழுமையாக ஆராயப்படாத “அறியப்படாத வளங்களாக”வே இருக்கின்றன. இவற்றை கண்டறியவும், பாதுகாப்பாக பயன்படுத்தவும் Marine Geology, Ocean Engineering போன்ற துறைகள் அவசியம்.
“அறியப்படாதவற்றை அறிய ஆராய்ச்சி” – காலத்தின் கட்டாயம்…!
இன்றைய உலகில் கடல் என்பது உணவு வளமாக மட்டுமல்ல;
- காலநிலை மாற்ற ஆய்வு • கடல்மட்ட உயர்வு
- கடற்கரை அழிவு
- கடல் மாசுபாடு போன்ற உலகளாவிய சவால்களுக்கும் மையமாக உள்ளது.
இலங்கை போன்ற தீவு நாடு, குறிப்பாக வடக்கு–கிழக்கு கரையோரங்களை கொண்ட தமிழ் பகுதிகள், இந்த மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை. அதனால், Marine Research without local participation என்பது நீண்டகாலத்தில் சமூகத்தை புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
Marine Expertise கல்வி: தமிழர்களின் எதிர்கால வாழ்வியல்..!
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம்,
- மீன்பிடி → Marine Biotechnology • பாரம்பரிய அறிவு → Ocean Data Science
- கரையோர வாழ்வு → Coastal Zone Management
- கடல் பாதுகாப்பு → Maritime Security & Policy குறிப்பாக எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள்..! என்ற வகையில் தேடப்பட வேண்டிய கட்டத்தில் உள்ளது.
இது வேலைவாய்ப்புக்கான கல்வி மட்டுமல்ல; சுயநிலையான பொருளாதாரம், அறிவியல் தன்னாட்சி, வளங்களின் உரிமை ஆகியவற்றுக்கான கல்வியாகும்.

இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டிய கட்டாயம் இன்றைய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், Marine Studies போன்ற துறைகளில் ஆர்வம் செலுத்தாத நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் நமது கடலை ஆய்வு செய்து, நமது வளங்களை நிர்ணயிக்கும் நிலை உருவாகும்.
அதனைத் தவிர்க்க,
- பாடசாலையில் நிலை முதல் கடலியல் கல்வி அறிமுகம் முக்கியமானது..!
- பல்கலைக்கழகங்களில் Marine Science Faculties • சர்வதேச ஆராய்ச்சி கூட்டாண்மைகள்
- தமிழ் பகுதிகளை மையமாகக் கொண்ட Marine Research Institutes உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் வாழும் சமூகமாக, கடலைப் புரிந்துகொள்ளாமல் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது. வடக்கு, கிழக்கு நீண்ட கரையோரப் பகுதிகளை கொண்ட இலங்கைத் தமிழர்கள், Marine Expertise கல்வி மற்றும் ஆராய்ச்சியை தமது வாழ்வியலின் மையமாக்கும் போதே, பொருளாதார, அறிவியல், சமூக விடுதலைக்கு வழி பிறக்கும். கடல் — நமது எல்லை அல்ல; கடல் — நமது எதிர்காலம்.